பீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!

பீகார் மாநிலத்தில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

டெல்லி, செப்-18

பீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே பிரமாண்ட ரெயில்வே பாலம் கட்டுவதற்கு கடந்த 2003-2004ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி ரூ.516 கோடி மதிப்பீட்டில் 1.9 கிமீ நீளத்திற்கு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், பீகாரின் புதிய ரெயில் பாதைகளையும், மின்பாதை திட்டங்களையும் இன்று துவக்கி வைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த கோசி மெகா ரெயில் பாலம் உள்ளது. இதன்மூலம் பீகார் மக்களின் 86 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது. அத்துடன் இந்தியா-நேபாள எல்லையில் இந்த பாலம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாலத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘பீகார் மாநிலத்தில் இன்று மொத்தம் ரூ.3000 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள், பீகார் ரெயில்வே இணைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு பகுதியின் ரெயில்வே இணைப்பையும் வலுப்படுத்தும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *