”வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்.”, ”நிரந்தர முதல்வர் எடப்பாடியார்”.. அதிமுக-வில் மீண்டும் வெடித்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை..!

வருங்கால முதல்வர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என ஈபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டதால் அதிமுகவில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னை, செப்-18

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் திமுக முழு வீச்சில் இறங்கியுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் இருந்து அப்பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று தற்போது வரை அதிமுகவில் முடிவு எடுக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக நிற்கும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை இபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயபேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க தொடர்ச்சியாக வருகை தந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்தனர்.

அப்போது, இருவரின் வருகையின் பொழுதும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தான் நிரந்தர முதல்வர்’ என முழக்கம் எழுப்ப, மறுபுறம் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அம்மாவின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ் என முழக்கமிட்டனர். அதே நேரத்தில் நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என இ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *