கணவர் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் புதுப்படம்

சென்னை.அக்டோபர்.16

 நடிகை ரம்யா கிருஷ்ணனன் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 வருடங்களுக்குப் பிறகு தனது கணவர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு   வெள்ளை மனசு படத்தில் அறிமுகமானாலும் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த முதல் வசந்தம் படம் திரையுலகில்  இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் நடித்திருந்த படையப்பா படம் பெரும் வெற்றிப்பெற்றது. படையப்பா படம் அவரின் கேரியரில் மிக முக்கியப்படமாக கருதப்பட்டது.இந்த நிலையில் தனது கணவர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில்  ரம்யா கிருஷ்ணன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *