புரட்டாசி அமாவாசை.. பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய இடங்கள்..!!

செப்-17

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை ஆகும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை நாட்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
ஆனால் தற்போது கொ ரோனா பரவலை தடுக்கும் வகையில் வரும் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அமாவாசை தினமான இன்று (வியாழக்கிழமை) பல்வேறு இடங்களில் தர்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளான இன்று ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பக்தர்கள் கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்று அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி மறுப்பாள் பக்தர்கள் இன்றி அமைதியாக காட்சியளிக்கிறது அக்னி தீர்த்தம். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர்.

இன்று மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் நேற்றே பொதுமக்கள் குவிந்து, காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் தாமிரவருணியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன் முதல் செப்டம்பர் 20 வரை பாபநாசம் தாமிரபரணியில் நீராடத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து தென் மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலிருந்து மகாளய அமாவாசைக்கு பாபநாசம் தாமிரவருணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீராடி வழிபட்டுச் செல்லும் நிலையில் இன்று பக்தர்கள் வருகை இன்றி பாபநாசம் வெறிச்சோடி காணப்பட்டது. பாபநாசம் சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி உள்ள நிலையில் பக்தர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *