பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்க வேண்டும்-ஜான்பாண்டியன்

சென்னை, அக்டோபர்-16

தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியலினத்திலிருந்து நீக்கி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான்பாண்டியன் கூறியதாவது, தேவேந்திர குல வேளாளர்களின் 7 உட்பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும். இதுகுறித்து, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எங்களின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி பட்டியலினத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி அரசாணை வெளியிடவேண்டும். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இது தொடர்பாக, தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிடவேண்டும். இவ்வாறு ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *