பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

சென்னை, செப்-17

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை அண்ணாசாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதனைபோல், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகள், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தந்தை பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *