தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் சேர்த்தது கறைதான்: கூவத்துடன் ஒப்பிட்டு கிருஷ்ணசாமி சீற்றம்

தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் சேர்த்தது கறை  போன்றது என்று   கூவத்துடன் ஒப்பிட்டு  புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 சென்னையில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பட்டியலின வகுப்பில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் மற்றும் வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.  ஆங்கிலேயர் காலத்தில் இருந்து  தேவேந்திர குல வேளார்களை  பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தவறுதலாக எஸ்.சி பட்டியலில்  இந்த மண்ணின் மூத்தக்குடியான, தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்களில் வேளாளர் குடி என்னும்  உழவர் குடி மக்களை  சேர்த்து வராலாற்று  பிழை செய்துள்ளனர்.  இதனால்  தீமைதான் நடந்துள்ளத எந்த நன்மையும் ஏற்படவில்லை எனவே தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி அரசாணை வெளியிட வேண்டும் என  தமிழக ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார்.

மேலும் எஸ்.சி பிரிவில் இருப்பது தேவேந்திர குல வேளாளருக்கு கறை என்றும்,கூவம் ஆற்றில் எவ்வாறு குளிக்க முடியாதோ அதுபோல் தான் என்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு கிருஷ்ணசாமி  சீற்றத்துடன் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *