தமிழகத்தில் இன்று மேலும் 5,652 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-16

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 84,567 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,652 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 983 பேர், செங்கல்பட்டில் 319 பேர், திருவள்ளூரில் 282 பேர், காஞ்சிபுரத்தில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை, சேலம் உள்பட சில மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 16ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனாவால் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 327 ஆண்கள், 2 லட்சத்து 06ஆயிரத்து 504 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 5,768 பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அளவில் இதுவரை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் கொரோனாவால் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இது தவிர 50 பேர் இணை நோய் மற்றும் கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *