சசிகலாவுக்கு இனி இடமில்லை : அமைச்சர் ஜெயக்குமார்

 

திருநெல்வேலி அக்டோபர்.16

அதிமுகவில் சசிகலா,தினகரன் ஆகியோருக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சசிகலாவை ஆட்சியிலும், கட்சியிலும் சேர்க்க்கூடாது என ஒரு மித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நிலைதான் இனியும் தொடரும். நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகி விட முடியாது. சீன அதிபருடன் சீன பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் கூறுவது சிறு குழந்தை தனம். எந்த நாட்டின் அதிபர் வெளிநாடு சென்றாலும் அவர்களுடன் அந்த நாட்டு அதிகாரிகள் வருவது வழக்கமானதுதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

 முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்.. இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளனர்” என்று பேசியிருந்தார். சீமானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சீமான் கூறும் 40 திருடர்கள் திமுகவினரைத்தான். அலிபாபாவும் 40 திருடர்களும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *