அரியர் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை… சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்..!

சென்னை, செப்-16

சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில்அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா? என அரசு விளக்கம் அளிக்க பொன்முடி கோரிக்கை வைத்தார். இதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கமளித்துள்ளார். அதாவது, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கு விசாரணை முடிந்தபின் அறிவிக்கப்படும் தீர்ப்பின் படியே அரியர் மாணவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுதவே தயாராக இல்லை என்றும் அமைச்சர் கூறினார். மேலும், அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா தனது தனி இமெயில் மூலமாக ஏஐசிடிசி கடிதம் எழுதியதாகவும் அதனை பற்றி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *