இந்தி, ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழிகள்.. மத்திய அரசு திட்டவட்டம்..!!

ஆங்கிலம், இந்தி தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய உள்துறைக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, செப்-16

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எம்பியும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என அவர் வினவியிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் ஆங்கிலம், இந்தி தவிர ஏனைய பட்டியல் மொழிகளை அலுவல் மொழிகளாக அறிவிக்கும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *