திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது…எல்.முருகன்
சென்னை, செப்-16

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று சென்னை கிண்டியில் உள்ள எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பாஜக வரவேற்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகித்த போது நீட் தேர்வை எதிர்த்து திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்போது எப்படி ஸ்டாலினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் ஏற்கனவே பாஜக போட்டியிட்டது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றார்.