உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு.. சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

சென்னை, செப்-16

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று நடைபெற்றது.
இதில், முக்கிய மசோதாக்களின் வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *