தமிழகத்தில் இன்று புதிதாக 5,697 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, செப்-15

தமி்ழகத்தில் இன்று புதிதாக 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,58,900 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,735 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,502-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,50,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 170 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 60,48,832
    பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 08 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,09,838 ஆண்கள், 2,04,341 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *