மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை.. மத்திய அரசு
நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி, செப்-15

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூவர்மாக ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்
நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதியில்லை.
மேலும் ஜிஎஸ்டி வரிவசூல் குறைவாக இருப்பதால் தற்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கமுடியாது எனவும் மத்திய அரசு அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசிடம் நிதி இல்லாத காரணத்தினால் வழங்க முடியவில்லை. ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருப்பதால் தற்போது கொடுக்க இயலாது. குறைவான வசூல் காலத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது என அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.