சீனாவுடனான லடாக் எல்லைப் பிரச்னை இன்னும் தீரவில்லை… ராஜ்நாத் சிங் பேச்சு

சீனாவுடனான லடாக் எல்லைப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-15

இது குறித்து இன்று மக்களவையில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,
சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை. எல்லை வரையறையை சீனா ஒப்புக்கொள்ள மறுப்பதால் சுமூகமான தீர்வு இல்லை. லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்திய சீன உறவில் தாக்கல் ஏற்படும். எல்லை பிரச்சனையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறையை சீனா ஏற்காமல் செயல்படுகிறது. சீனா தன்னிச்சையாக செயல்பட கூடாது என தூதரக ரீதியாக இந்தியா தெரிவித்துள்ளது.

பிரச்சனை நீடித்தாலும் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன. எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண பொறுமை அவசியம். எல்லைக்கோடு ஜனநாயகப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை என சீனா கருதுகிறது. சீனா உடனான எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது. எல்லைப்பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் சீனப்படைகள் தங்களது துருப்புகளை அதிகரித்து வருகின்றனர். எல்லையில் உள்ள நமது வீரர்கள் கடுமையான சோதனைகளை தாண்டி நாட்டை பாதுகாக்கின்றனர். எல்லை பிரச்சனையில் எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

லடாக்கில் சீனா 38,000 ச.கிமீ பரப்பு நிலப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் 5,180 ச.கிமீ பரப்பு நிலப் பகுதியை ஆக்கிரமித்து சீனாவிடம் கொடுத்துள்ளது. சீன ராணுவம் லடாக் பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். ராணுவ வீரர்கள் தன்னுயிரை நீத்து சீனாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். லடாக் எல்லையில் சீனாவின் முயற்சிகளை நமது வீரர்கள் முறியடித்தனர். பிரச்சனைக்கு இறுதி தீர்வு காணப்படும் வரை எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து நடக்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நிற்போம். ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாம் நிற்போம் என மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *