2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாகிறார்..!!

பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, செப்-15

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.

சசிகலா நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும். சசிகலாவின் பரோல் காலத்தைக் கணக்கிட்டு விடுதலை தேதி மாறும். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி அபராதத்தைக் கட்டத் தவறினால் ஓராண்டுகள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. எனவே அபராதத்தை செலுத்தத் தவறினால், 2022-ம் தேதி ஜனவரியில்தான் சசிகலா விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *