நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்… முதல்வர் கொந்தளிப்பு

நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை, செப்-15

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் திணித்தபோது வேடிக்கை பார்த்தது அதிமுக என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்” என பேரவையில் முதல்வர் ஆவேசமாக பேசினார். 2010 இல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக கூட்டணியில் இருந்ததா, இல்லையா? என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகதான் காரணம். கூட்டணியிலிருந்த திமுக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது. இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *