அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் டொமினிக் தீம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் பெற்றார்.

செப்-14

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி அசத்தினார். மூன்றாவது செட்டில் தீம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக அவர் 3-வது செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் ஆக்ரோஷமாக ஆடினார். இதனால் அந்த செட்டையும் 7-6 எனக் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஸ்வெரேவை வீழ்த்தி டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

யு.எஸ். ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றின் கடைசி செட் முதல்முறையாக டை பிரேக்கர் வரை சென்றது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *