வடகிழக்கு பருவமழை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

 சென்னை, அக்டோபர்-16

வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கவும், ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்றே தொடங்கியுள்ளது.  தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும், நிலைமையை ஆய்வு செய்யவும் மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன்படி, மாவட்ட வாரியாக மொத்தம் 42 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *