உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை…பிரதமர் மோடி

உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்லும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லி, செப்-14

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் . அனைத்து உறுப்பினர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *