தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,693 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-13

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 02 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 84,308 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,693 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 994 பேர், செங்கல்பட்டில் 299 பேர், திருவள்ளூரில் 300 பேர், காஞ்சிபுரத்தில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 02 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. பாலின வாரியாக 3 லட்சத்து 03 ஆயிரத்து 201 ஆண்கள், 1 லட்சத்து 99 ஆயிரத்து 529 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநில அளவில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 பேர் குணமடைந்துள்ளனர். அதே சமயம். 47 ஆயிரத்து 012 பேர் சிகிச்சையில் உள்ளனர். எனினும் இன்று 74 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 17 பேர், செங்கல்பட்டில் 6 பேர், கோவையில் 4 பேர், கடலூரில் 4 பேர், ஈரோட்டில் 3 பேர், காஞ்சிபுரத்தில் 2 பேர், மதுரையில் 4 பேர், புதுக்கோட்டையில் 3 பேர்,

ராணிப்பேட்டையில் 2 பேர், சேலத்தில் 10 பேர், திருவள்ளூரில் 6 பேர், திருவண்ணாமலையில் 2 பேர், வேலூரில் 2 பேர், விழுப்புரத்தில் 2 பேர், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 74 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் கொரோனாவால் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 66 பேர் இணை நோய் மற்றும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *