தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, செப்-13

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் (ம) அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரி என்பவரின் மகன் சிறுவன் லிங்கேஷ் என்பவர் விளையாடிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மேல்நகர் மதுரா தேவாங்குபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி தேவி என்பவரின் கணவர் திரு. ராஜேஷ் என்பவர் பட்டுப்பூச்சி வளர்ப்பு குடோனில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், மாகரல் கிராமத்தைச் சேர்ந்த திரு. கோதண்டன் என்பவரின் மனைவி திருமதி ரேவதி என்பவர் எதிர்பாராத விதமாக மின்கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜ் என்பவரின் மகன் திரு. ராஜேந்திரன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தைச் சேர்ந்த திருமதி அனித்தா என்பவரின் கணவர் திரு. நாமதேவன் என்பவர் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;செஞ்சி வட்டம், முல்லை நகரைச் சேர்ந்த திரு. கோவிந்தராஜ் என்பவரின் மகன் திரு. தங்கமணி என்பவர் மின் கம்பம் உடைந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், மாடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சுஜாதா என்பவரின் கணவர் திரு. கண்ணாயிரம் என்பவர் மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த திருமதி முத்துலெட்சுமி என்பவரின் கணவர் திரு. சண்முகசுந்தரம் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; தென்காசி மாவட்டம், கருவந்தா கிராமத்தைச் சேர்ந்த திருமதி ரம்யா என்பவரின் கணவர் திரு. கிருஷ்ணபெருமாள் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி செல்வகனி என்பவரின் மகன் திரு. வினோத்ராஜா என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த திருமதி சாரதா என்பவரின் கணவர் திரு. எட்வின் சுரேஷ் என்பவர் மின்கம்பத்தில் ஏறிய போது தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி பஞ்சு என்பவரின் மகன் செல்வன் மகுடேஸ்வரன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் ;

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பவுன்ராஜ் என்பவரின் மகன் திரு. அழகு கருப்பசாமி என்பவர் வீட்டின் அருகே எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், மூக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. கதிர்வேல் என்பவரின் மகன் திரு. கணேசன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், அசோக் நகரைச் சேர்ந்த திரு. சீதாராமன் என்பவரின் மகன் செல்வன் ஹரிஹரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *