நீட் தேர்வுக்கு எதிராக ட்ரெண்டிங் ஆகும் #BanNEET_SaveTNStudent ஹேஷ்டேக்..!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் டுவிட்டரில் #BanNEET_SaveTNStudent என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சென்னை, செப்-13

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தர்மபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறும் சூழ்நிலையில், 3 மாணவர்களும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் நேற்று காலை முதலே டுவிட்டரில் நீட் தேர்வை தடை செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக (#BanNEET_SaveTNStudent) என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தன.

தற்போது, #BanNEET_SaveTNStudent ஹேஷ்டேக் தமிழகத்தில் டிரெண்டிங் ஆகி டுவிட்டரில் முதலிடத்தில் உள்ளது. #Govt_Killed_NEET_Students என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டுவிட்டரில் 4-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *