மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டெல்லி, செப்-13

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு (55) கடந்த மாதம் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உடல் நலம் பெற்ற அமித்ஷா, 13 நாட்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 7 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “அமித்ஷா முழு குணம் அடைந்துள்ளார். தன்னுடைய அன்றாட அலுவல்களை அவர் சீராக செய்ய முடியும்” என்றது.

இந்நிலையில், மூச்சுத் திணறல் இருப்பதாக கூறியதை அடுத்து நேற்று இரவு 11 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அமித்ஷா அனுப்பப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய அமித்ஷாவின் உடல் நிலை குறித்து தகவல்கள் எதுவும் மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *