நீட் தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைக்கிறது.. மு.க.ஸ்டாலின்
சென்னை, செப்-12

திமுக தலைவர் மு.க.ஸ்டாலிற் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
“எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு” என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது. ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.
தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன்!
நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்!
என குறிப்பிட்டுள்ளார்.
