தண்ணீர் லாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி எச்சரிக்கை

சென்னை, செப்-11

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாநில அலுவகத்தினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரகத்தொழில்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஊரக புத்தாக்க திட்டமானது தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னையில் தண்ணீர் லாரிகள் மூலம் அதிகமாக விபத்துகள் ஏற்படுகிறது குறித்த கேள்விக்கு, தனியார் தண்ணீர் லாரிகள் தான் அதிவேகமாக இயக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு விபத்துகளை உண்டாக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது தமிழக அரசு அதற்கான தெளிவான அரசாணையை தற்போது வெளியீட்டு இருக்கிறார்கள். எனவே அரசு வகுத்துள்ள வரையறைக்கு உட்பட்டு உள்ள நிறுவனங்கள் மட்டும் தான் அங்கு துவங்க முடியும் என்றும் எனவே அதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

அதேபோல் மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு அதிமுக என்றும் பச்சைகொடி காட்டும் என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களை அரசு எதிர்க்கும் இது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *