உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவர்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்த வேண்டாம்.. முதல்வர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தினசரி சராசரி பாதிப்பு 7,500-லிருந்து 5,500ஆக குறைந்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செப்-11

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.120.23 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரூ.742.52 கோடியில் வளர்ச்சிப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ரூ.291 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். ரூ.120.23 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் முதல்வர் கூறியதாவது:-

மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதே அரசின் நடவடிக்கைக்கு சான்று. அண்டை மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்துள்ளன. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் பொய்யாகக் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததால் இறப்பு விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவர்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்த வேண்டாம். தமிழகத்தில் சராசரி கொரோனா பாதிப்பு 7,500ல் இருந்து 5,500 ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *