6 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் மத்திய-மாநில அரசுகள் அமைதி காக்கின்றன என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, செப்-11

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவரும், தேநீர் கடைகளில் பின்பற்றப்பட்ட இரட்டை குவளை முறையை ஒழிப்பதற்காக போராடியவரும், சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டவருமான இம்மானுவேல் சேகரனின் 63வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இம்மானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இம்மானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலை வீரர் #இமானுவேல்சேகரனார் நினைவு நாள் இன்று.தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் மத்திய-மாநில அரசுகள் அமைதி காக்கின்றன! தக்க தீர்வினைப் பெற தி.மு.க. வலியுறுத்தும் என்பது உறுதி! வீரர் புகழ் வாழ்க! என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *