இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. அமைச்சர்கள் மரியாதை

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பரமக்குடி, செப்-11

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவரும், தேநீர் கடைகளில் பின்பற்றப்பட்ட இரட்டை குவளை முறையை ஒழிப்பதற்காக போராடியவரும், சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டவருமான இம்மானுவேல் சேகரனின் 63வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் 5 பேருக்கு மிகாமல் மாவட்ட கலெக்டரிடம் முன்அனுமதி பெற்று, சொந்த வாகனங்களில் வந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்தபடி, அரசின் வழிமுறைகளை பின்பற்றி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *