உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு

சென்னை.அக்டோபர்.16

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணையை  கண்காணிப்போம் என தலைமை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் பெண்கள் பலரை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

 கல்லூரி மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கீழ் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க  வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 மேலும் பாலியல் வழக்கின் சிபிஐ விசாரணையை உயர்நீதி மண்றம் கண்காணிக்க கோரி பெண்கள் வழக்குரைஞர் சங்க நிர்வாகி சாந்தகுமாரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சிபிஐ தரப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணை தொடங்கியது. இதுவரை 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது..

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் நவம்பர் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *