தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அனுமதி

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது. அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்-11

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *