இயற்கை மருத்துவத்தால் கொரோனாவை ஒழிக்க முடியும்.. அமைச்சர் S.P.வேலுமணி

கோவை, செப்-11

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது ;-

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இந்தியாவில் வைரஸ் தொற்று பரிசோதனைகள் அதிக அளவில் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது கோவை மாவட்டம் இந்தியாவில் முக்கியமானதொரு தொழில் நகரம் மட்டுமல்லாது சிறு குறு தொழில் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மையமாகத் திகழ்ந்து வருகிறது இதனால் நாள்தோறும் தொழிலாளர்கள் பொதுமக்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்து கோவைக்கு அதிகளவில் வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 806 நபர்களுக்கு corono வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தற்போதுவரை 19 ஆயிரத்து 479 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 15 ஆயிரத்து 635 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் பல்வேறு நோய் தொடர்பில் இருந்த 332 நபர்கள் பல்வேறு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது 3512 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர் அவர்களில் 314 நபர்கள் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 232 நபர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 51 நபர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் 37 நபர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும் 28 நபர்கள் மதுக்கரை அரசு மருத்துவமனையிலும் ஆயிரத்து 20 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும்கொடிசியா சிகிச்சை மையத்தில் 238 நபர்களும் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்ட மயக்கத்தில் 100 நபர்களும் மத்தம்பாளையம் காருண்யா கல்லூரியில் 171 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர் பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 30 நபர்களும் s.m. மருத்துவமனையில் 17 நபர்களும் சுகுணா கல்யாண மண்டபத்தில் 107 நபர்களும் அட்லஸ் ஹோட்டலில் 35 நபர்களும் சிஎஸ்ஆர் மருத்துவ மனையில் மூன்று நபர்களும், அறிகுறி அற்ற வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 579 நபர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களை இருந்து மீட்டு எடுக்கும்சிறப்பு முயற்சியாக சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அதன்படி கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 591 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இதில் தற்போது 432 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 159 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்

கோவை மாவட்டத்தில் corono வைரஸ் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக 9178 சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
மக்கள் நலன் காக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனிமனித சுத்தம் சமூக இடைவெளி வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிதல் வெளியில் சென்று திரும்பியபின் கை கால்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவரையும் காக்கும் என உணர்ந்து தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் இயற்கை மருத்துவ வழங்கப்படும் உணவு விவரம்

கொரோனா நோயாளிகளுக்கு 6:30 பால் அல்லது அரிசி கஞ்சி காலை 8 மணிக்கு கபசுரக் குடிநீர் 8:30 பொங்கல் இட்லி உப்புமா வெங்காய ஊத்தாப்பம் பூரி ரொட்டி இடி யாப்பம் ஏதேனும் இரண்டு வகை தேங்காய் சட்னி தக்காளி சட்னி சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறது காலை 10 மணிக்கு வைட்டமின் தீவனம் வாழைப்பழம் சாத்துக்குடி 10:30 மணிக்கு இஞ்சி எலுமிச்சை சாறு சத்துமாவு கஞ்சி 12:00 மணிக்கு மிளகு ரசம் மதிய உணவு ஒரு மணிக்கு சாப்பாடு சாம்பார் ரசம் காய்கறி பொரியல் அல்லது தக்காளி சாதம் தேங்காய் சாதம் காய்கறி நெய் சாப்பாடு ஏதேனும் ஒன்று மற்றும் தயிர் சாதம் வேகவைத்த முட்டை ஆகியவை வழங்கப்படுகிறது

12:00 மணிக்கு மிளகுரசம் மதிய உணவு ஒரு மணிக்கு சாப்பாடு சாம்பார் ரசம் காய்கறி பொரியல் அல்லது தக்காளி சாதம் தேங்காய் சாதம் காய்கறி நெய் சாப்பாடு ஏதேனும் ஒன்று மற்றும் தயிர் சாதம் வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது

மாலை 4 மணிக்கு போன்விட்டா காய்கறி சூப் மற்றும் சுண்டல் இரவு 8 மணிக்கு சப்பாத்தி தோசை கிச்சடி ஏதேனும் இரண்டு காய்கறி குருமா சட்னி சாம்பார் குழந்தைகளுக்கு பால் அரிசி கஞ்சி மற்றும் பிஸ்கட் எப்போது கேட்டாலும் வழங்கப்பட்டு வருகிறது

கோவை மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 344 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 9 லட்சத்து 90 ஆயிரத்து 317 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கோவை மாவட்டத்தில் உள்ள பகுதிகளை ஐந்து மண்டலங்களும் ஊரகப்பகுதி அனைத்து மண்டலங்களிலும் பிரித்து மாவட்ட வருவாய் அலுவலர் நுழைந்து அலுவலர்களும் துணை ஆட்சியர் நிலையில் 5 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *