திருச்சி லலிதா ஜுவல்லரியின் 25 கிலோ நகைகள் மீட்பு

திருச்சி, அக்டோபர்-16

திருச்சியில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் பிரபல நகைக் கடையில் நடைபெற்ற 28 கிலோ நகைகள் திருட்டு சம்பவத்தில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனை விசாரிக்க அனுமதிகோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகைக்கடை கொள்ளையில் நேரடியாக 3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர்.  இந்த வழக்கில் விசாரணை நடத்த பெங்களூரு காவல்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். முருகனை விசாரித்த பிறகே நகைகள் முழுவதும் மீட்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *