நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு பா.ம.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு பா.ம.க. ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

சென்னை, செப்-10

இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலவந்தங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை கொண்டது தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும், நானும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளோம்.

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸூம், அன்புமணியும் வலியுறுத்தியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ. 7 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து நிதியுதவியை வழங்குவர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் மாணவர்கள் எவரும் தற்கொலை போன்ற முடிவுகளை உணர்ச்சி வேகத்தில் எடுத்து விடக் கூடாது என்றும் பா.ம.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *