சிகிச்சைக்கு பணமில்லாமல் அகால மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜி..!!

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 45.

சென்னை, செப்-10

நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதியில்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 15 நாட்களாக அவர் மரணத்துடன் போராடிய தகவல் பலரையும் உலுக்கி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய கை கால்கள் வாதத்தால் செயலிழந்தன. உடனடியாக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அதிக செலவானது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்துள்ளார் வடிவேல் பாலாஜி. செலவுக்கு பணமில்லை சிகிச்சைக்கான செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப்பட்ட குடும்பத்தினர் அவரை சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கும் மருத்துவ செலவு கட்டுப்படியாகவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அங்கு கொரோனா நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பியிருந்தன. இதனால் இந்நிலையில் இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் வடிவேல் பாலாஜி. ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்தது. தன்னுடைய நகைச்சுவை திறமையால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் வடிவேல் பாலாஜி, மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைகழிந்து அகாலமாக மரணமடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *