கன்னியாகுமரியில் போட்டியிட போகிறேனா?.. குஷ்பு நச் பதில்..!

கன்னியாகுமரி தொகுதியில் நான் போட்டியிடும் முயற்சியில் எப்பொழுதும் இறங்கியதில்லை, அதே போல் போட்டியிடும் எண்ணமும் எனக்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை, செப்-10

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது ;-

கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியில் நான் இறங்கவேயில்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை என்னிடம் இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் குஷ்பு அந்த தொகுதியில் சீட் கேட்கிறார் இந்த தொகுதியில் சீட் கேட்கிறார் என வதந்திகள் பரப்பப்படும். இதனால் இது போன்ற வதந்திகள் எனக்கு புதிதல்ல. அரசியலுக்கு வந்தது முதல் இதை பார்த்து வருகிறேன். கன்னியாகுமரி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு தெரியும். கட்சி முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. குஷ்பு சீட் கேட்டார் கட்சி கொடுக்க மறுத்ததால் வருத்தத்தில் இருக்கிறார் என வழக்கம்போல் இப்போதும் செய்திகள் உலவவிடப்படும். என்னை பொறுத்தவரை நான் வதந்திகளை காது கொடுத்து கேட்பதில்லை’

நிச்சயம் வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளருக்கு கன்னியாகுமரி தொகுதியில் தலைமை சீட் கொடுக்கும். கட்சித் தலைமை யாரை நிறுத்தப் போகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்று செயல்படுவேன். மற்றப்படி இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *