சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகை ரத்து…திமுக எம்.பி. கனிமொழி எதிர்ப்பு

சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச்சலுகை ரத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-10

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது. பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *