எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை, செப்-10

தமிழகத்தில் பொதுத்தேர்தல் சில மாதங்களிலேயே நடக்க உள்ளதால் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.

நேற்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

இந்நிலையில் மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. 8 மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *