விரைவில் உங்கள் வறட்டு கவுரவம் அழியும்.. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடிய கங்கனா..!!

இன்று என் வீடு இடிந்தது, நாளை உங்கள் வறட்டு கௌரவம் அழியும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடி நடிகை கங்கனா ரணாவத் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மும்பை, செப்-9

மகாராஷ்டிரத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் கங்கனா இன்று மும்பை வந்தடைந்தார். இதனிடையே, மும்பையிலுள்ள கங்கனாவின் பாந்த்ரா அலுவலகத்தில் அங்கீகாரம் இல்லாமல் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டு, கட்டடத்தின் பகுதிகளை மும்பை மாநகராட்சி இன்று இடித்தது. இதையடுத்து, கங்கனா அலுவலகத்தை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடி கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “திரைத்துறை மாபியா கும்பலுடன் இணைந்து என் வீட்டை இடித்து பெரிதளவில் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறீர்கள் உத்தவ் தாக்கரே? இன்று என் வீடு இடிந்தது, நாளை உங்கள் வறட்டு கௌரவம் அழியும். இது காலச் சக்கரம். எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நீங்கள் எனக்கு பெரிய உதவியைச் செய்திருப்பதாக நினைக்கிறேன். காஷ்மீர் பண்டிட்டுகள் கடந்து வந்த கொடுமைகள் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் இன்றுதான் அதை உணர்கிறேன். நான் அயோத்தி மட்டுமல்ல காஷ்மீர் குறித்தும் படம் எடுப்பேன் என்பதை இந்த நாட்டுக்கு இன்று சபதம் செய்துகொள்கிறேன். இத்திரைப்படங்கள் எடுத்து நாட்டு மக்களை விழிப்படையச் செய்வேன். காரணம் எங்களுக்கு இப்படி நடக்கும் என்பது தெரியும். ஆனால், இது எனக்கு நடந்தது என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. இந்த வெறுப்புணர்வும், பயங்கரவாதமும் எனக்கு நடந்தது நல்ல விஷயம்தான் உத்தவ் தாக்கரே. ஏனென்றால், அதில் அர்த்தம் இருக்கிறது. ஜெய்ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *