தமிழகத்தில் புதிதாக இன்று 5,584 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-9

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,23,231 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,516 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,090- ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,44,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 163 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 49,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 55,44,850 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,89,777 ஆண்கள், 1,90,718 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *