காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வெட்கப்படவேண்டும்-பிரதமர் மோடி

அகோலா, அக்டோபர்-16

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வெட்கக்கேடானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 21-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வெட்கக்கேடானது. நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவதற்காகவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி. அம்பேத்கருக்கு இத்தனை ஆண்டுகளாக பாரத ரத்னா விருது வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *