புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழு அமைப்பு
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய தமிழக அரசு 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
சென்னை, செப்-8

மும்மொழிக் கொள்கையைத் தமிழகம் அனுமதிக்காது என்று தெரிவித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே உயர்க்கல்வி குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்துவிட்டது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.