இறுதிப்பருவத் தேர்வு செப்.22 முதல் இணைய வழியில் நடைபெறும்…அண்ணா பல்கலை. அறிவிப்பு.!!!

இறுதிப்பருவத் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதிப்பருவத் தேர்வு வரும் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

சென்னை, செப்-8

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் பருவத்தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இறுதி பருவத் தோ்வை தவிர, மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இறுதியாண்டு பருவத் தோ்வையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இறுதி பருவத் தோ்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இறுதி பருவத் தோ்வை இணையவழியில் நடத்துவதற்கான தேதியை இன்று வெளியிட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கல்லூரிகள், அதன் அங்கீகாரம் பெற்ற தனியாா் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் இறுதியாண்டு மாணவா்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி ஆன்லைன் முறையில் செப்டம்பர் 22 முதல் 27 வரை தோ்வுகள் நடைபெறும். தேர்வுக்கு கேமரா, மைக்ரோ போன் வசதி கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும், விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்வித்தாள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *