கொடைக்கானலை நாளை முதல் சுற்றி பார்க்க அனுமதி..வெளி மாவட்ட பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்..!

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், செப்-8

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:-

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர்.வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *