தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணம்..!

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் வலம் வந்த நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.

அமராவதி, செப்-8

பிரம்மபுத்துருடு படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் உத்தமபுத்திரன், ஆறு, ஆஞ்சேநேயா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ளார்.கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால் குண்டூரில் தனது வீட்டில் வசித்து வந்த ஜெயபிரகாஷ் ரெட்டி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெலுங்கு திரைப்பட துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இவரின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *