நாட்டின் தூய்மையான மருத்துவமனைகளில் புதுவை ஜிப்மர் 2 வது இடம்

புதுச்சேரி.அக்டோபர்.16

இந்தியாவில் உள்ள தூய்மையான மருத்துவமனைகள் பட்டியலில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இரண்டாமிடம் பிடித்துள்ளது.

துய்மையை போற்றி பேணும் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் ‘காயகல்ப்’ விருது வழங்கப்படும். அந்த வகையில் 2018-19 ஆண்டிற்கான காயகல்ப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடத்தை பிடித்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இரண்டாமிடமும் பிடித்தது. அவற்றிற்குரிய காயகல்ப விருதினை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கினார்.

இரண்டாமிடம் பிடித்த ஜிப்மர் மருத்துவமனைக்கு காயகல்ப் விருதுடன், ரூ. 1.5 கோடி பரிசு தொகையும் அதன் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *