இந்தியாவில் ஒரே நாளில் 75,809 பேருக்கு கொரோனா..!!
நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42.80 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 72 ஆயிரத்தை தாண்டியது.
டெல்லி, செப்-8

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 802 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 423 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,133 ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கையும் 72,775 ஆக அதிகரித்து இருக்கிறது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 73,521 பேர் குணமடைந்துள்ளனர்;
இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 33,23,950 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,83,697 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குணமடைந்தோர் விகிதம் 77.65% ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.70% ஆக குறைந்துள்ளது.