செப்டம்பர் 14-ல் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல்

செப்டம்பர் 14-ல் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, செப்-7

இதுதொடர்பாக இன்று மாநிலங்களவை செயலாளர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலங்களின் கவுன்சிலின் செயல்முறை மற்றும் நடத்துதல் விதிகள் எண் 7-ன் படி, செப்டம்பர் 14-ல் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என்று மாநிலங்களவைத் தலைவர் முடிவு செய்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வரும் 11-ஆம் தேதி நண்பகல் வரை தாக்கல் செய்யலாம் தேர்தலானது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தள எம்.பியான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதேசமயம் பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர்கள் தொடர்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *