தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 89 உயிரிழந்துள்ளனர்.

சென்னை, செப்-7

தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,69,256 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 89 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,930 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,10,116 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,215 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *